sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜன.,9 ல் ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

/

ஜன.,9 ல் ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஜன.,9 ல் ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஜன.,9 ல் ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

35


UPDATED : ஜன 07, 2026 11:00 PM

ADDED : ஜன 07, 2026 06:06 PM

Google News

UPDATED : ஜன 07, 2026 11:00 PM ADDED : ஜன 07, 2026 06:06 PM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜன.,09 வெளியாக இருந்த ஜனநாயகன் படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மறுநாள் (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், பட வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நேற்று (ஜன.06) அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, இன்றைக்கு ஒத்திவைத்தார். அதன்படி, இன்று மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள்:

தணிக்கை வாரியம் தரப்பு:

சான்றிதழ் வழங்காமல் நிறுத்துவதற்கு தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உண்டு. தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. திருப்தி இல்லை என்றால் மறுஆய்வுக்கு அனுப்புவது வழக்கமானதுதான். முதல் தணிக்கைக் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மறுஆய்வுக்குழுவில் இருக்க மாட்டார்கள், வேறு ஐந்து பேர் தான் புதிய குழுவில் இருப்பர். புதிய உறுப்பினர்கள் படத்தை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் கால அவகாசம் வழங்கவேண்டும்.

நீதிபதி:மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது குறித்து படக்குழுவுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?

தணிக்கை வாரியம்:ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கோரி பட நிறுவனம் டிசம்பர் 18ம் தேதி விண்ணப்பித்தனர். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஜன.,5ம் தேதியே தயாரிப்பாளரிடம் கூறிவிட்டோம். சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்போ அல்லது மறுக்கப்படும் முன்போ நீதிமன்றத்தை அணுக முடியாது. மறு ஆய்வுக்குழுவுக்கு பரிந்துரைத்த 20 நாட்களுக்குள் புதிய குழு அமைக்கப்பட வேண்டும்.

அதேபோல், ஒரு படத்தை தணிக்கை செய்ய 15 நாட்கள் தேவைப்படும். எனவே, ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வாரம் அவகாசம் தேவை. விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே எங்களுக்கு அதிகாரம், இந்த விஷயத்தில் எங்களுக்கு தீயநோக்கம் எதுவுமில்லை. தணிக்கை குழுவின் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே தணிக்கை குழுவுக்கு உத்தரவிட முடியும்.

தயாரிப்பு நிறுவனம்:ஜனநாயகனை முதலில் பார்த்த தணிக்கை குழுவினர் ஒருமனதாக 'யுஏ' சான்று வழங்க முடிவு செய்தனர். தணிக்கை குழுவை சேர்ந்தவர்களால் புகார் அளிக்க முடியாது. பரிந்துரைகள் தான் வழங்க முடியும். படத்தை பார்த்த ஐந்து பேரும் தனித்தனியாக பரிந்துரைகளை பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் எப்படி புகார் அனுப்ப முடியும்? தணிக்கை உறுப்பினர் ஒருவர் புகார் அளித்தது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று. விண்ணப்பித்த ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்குவதுதான் வழக்கம். ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகனை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள். குறித்த நேரத்தில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும்.

நீதிபதி:தணிக்கை வாரியத்தின் டைம்லைனை தயாரிப்பு நிறுவனம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்

தயாரிப்பு நிறுவனம்:பெரும்பான்மை உறுப்பினர்கள் சான்று வழங்க பரிந்துரைத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதிக உறுப்பினர்களின் முடிவை எப்படி செல்லாது என சொல்ல முடியும்?

தணிக்கை வாரியம்:ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரம் நேர்மையுடன் நடைபெற்றது.

தயாரிப்பு நிறுவனம்:நாளை மறுநாள் ரிலீஸ் என என்பதால், இன்றே தீர்ப்பு வழங்கிடுங்கள்

நீதிபதி:இன்றே வாதங்களை நிறைவு செய்யுங்கள், முடிந்தளவு நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன். எனத் தெரிவித்து இருந்தார்.

ஒத்திவைப்பு


இந்நிலையில், இந்தப் படத்தை தயாரித்த நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களினால் படத்தை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நிறுத்தம்

இதனிடையே, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சென்னை, கோல்கட்டா, சண்டிகர் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இணைய வழி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகும் என்ற போஸ்டரும் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.



வெளிநாடுகளில் தள்ளிவைப்பு


பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மலேஷியா உள்ளிட்ட 39 நாடுகளில் ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us