விஜய் நடிக்கும் கடைசி படம் 'ஜனநாயகன்': குடியரசு தினத்தில் அறிவிப்பு!
விஜய் நடிக்கும் கடைசி படம் 'ஜனநாயகன்': குடியரசு தினத்தில் அறிவிப்பு!
UPDATED : ஜன 26, 2025 04:14 PM
ADDED : ஜன 26, 2025 11:27 AM

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு 'ஜனநாயகன்' என பெயரிடப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.,26) காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‛ஜனநாயகன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில், தொண்டர்கள் முன்பாக நடிகர் விஜய் வேனில் ஏறி ‛செல்பி' எடுப்பது போன்று படம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சி துவக்கியுள்ள விஜய்யின் கடைசி படம் என்பதால், இது அரசியல் கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை இரண்டாவது பார்வை வெளியிப்பட்டது. சாட்டையுடன் விஜய் நிற்கும் இந்த போஸ்டரில், ' நான் ஆணையிட்டால்...' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தற்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் கால் எடுத்து வைத்துள்ள, விஜய் கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது