ADDED : அக் 13, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களோடு மக்களாக பயணம் செய்ய, காங்கிரசார் தயாராக இருக்க வேண்டும். தமிழக மீனவ பகுதிகளில், ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் ஊடுருவ ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா முழுதும் பூத் அளவில், வாக்காளர் களை பலப்படுத்த, காங்.,கில் முயற்சி எடுக்கப்படுகிறது.
வரும் 2029 லோக்சபா தேர்தலில், காங்., பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். அதற்கு, காங்கிரசார் ஒவ்வொரு வரும் திட்டமிட்டு பணி யாற்ற வேண்டும் அல்லது வேலை செய்வோருக்கு வழிவிட வேண்டும்.
தமிழகத்தில், புதிய அரசியல் வரவான த.வெ.க., தலைவர் விஜய், மவுன அரசியல் செய்கிறார். இது அரசியலில் புதுவிதமாக உள்ளது. அ.தி.மு.க - த.வெ.க., கூட்டணி ஏற்படப் போவதாக, இல்லாத ஒன்றை அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது வதந்தி என்பதால், அ.தி.மு.க., தரப்பு பரப்பும் செய்தியை யாரும் நம்பவில்லை.