தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்

விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்

விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்


ADDED : டிச 19, 2014 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2014 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன் மாரடைப்பு காரணமாக இன்று இரவு 7.45 மணியளவில், சென்னை மலர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79.

ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ். வாசனின் மகனான பாலசுப்ரமணியன், கடந்த 1936ம் வருடம் டிசம்பர் 28ம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் லயோலா கல்லூரியில் பி.காம்., பட்டப்படிப்பு படித்தார். விகடன் குழுமத்தில், கடந்த 1956ம் ஆண்டு இணைந்தார். பின்னர் அவரது தந்தை மரணத்திற்கு பின் ஜெமினி மற்றும் விகடன் குழும தலைவராக பதவியேற்றார். அன்றிலிருந்து இன்று வரை அவர் விகடன் குழும தலைவராக உள்ளார். இவர் நடிகர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, அமிதாப் பச்சன், ராஜேஸ் கண்ணா உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து படங்கள் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் அவர், இன்று இரவு 7.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக மலர் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். மகன் சீனிவாசன் தற்போது விகடன் குழும நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மூன்று மகள்களும் அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் வந்த பிறகு தான் நாளை அல்லது நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறும். பாலசுப்ரமணியனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நாளை வைக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us