sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு: 82.48 % வாக்கு பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு: 82.48 % வாக்கு பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு: 82.48 % வாக்கு பதிவு


UPDATED : ஜூலை 10, 2024 08:25 PM

ADDED : ஜூலை 10, 2024 07:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2024 08:25 PM ADDED : ஜூலை 10, 2024 07:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது. மாலை6 மணி நிலவரப்படி 82.48 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தமிழக போலீசாருடன், மூன்று கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விக்கிரவாண்டி தொகுதியில், 276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடப்பதை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் தங்கள் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க, 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது. மாலை6 மணி நிலவரப்படி82.48 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன. வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலை்பபள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 13ம் தேதி நடக்கிறது. அதுவரை ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us