தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கிராம உதவியாளர்கள் கோரிக்கை மனு அளிப்பு

 கிராம உதவியாளர்கள் கோரிக்கை மனு அளிப்பு

 கிராம உதவியாளர்கள் கோரிக்கை மனு அளிப்பு


ADDED : மே 22, 2026 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கிராம உதவியாளர்கள், அமைச்சர்களை சந்தித்து, தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகம் முழுதும் உள்ள கிராமங்களில், அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது, பிறப்பு, இறப்புகள் குறித்து, அரசுக்கு தகவல் தெரிவிப்பது உட்பட பல்வேறு பணிகளை, கிராம உதவியாளர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு, நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

தமிழக கிராம உதவியாளர்கள் சங்க மாநில ஒங்கிணைப்பளார் முருகன் மற்றும் நிர்வாகிகள், நேற்று வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் உள்ளிடோரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இது குறித்து, முருகன் கூறியதாவது:

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, கடந்த தி.மு.க., ஆட்சியில், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். எங்களின் போராட்டத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசிடம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us