பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
ADDED : ஏப் 02, 2025 04:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
உடையாந்தாங்கலை சேர்ந்த சுபாஷ் என்பவர், பட்டா மாறுதல் செய்து தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு, பட்டா மாறுதல் செய்ய ரூ.5,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனை வழங்க மனமில்லாத சுபாஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், லஞ்சப் பணத்தை வி.ஏ.ஓ., திருநாவுக்கரசுவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, லஞ்சப் பணத்துடன் வி.ஏ.ஓ., திருநாவுக்கரசை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.