வீட்டு மனையில் சர்ச் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
வீட்டு மனையில் சர்ச் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
ADDED : நவ 12, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன் நகரில், வீடு கட்ட வாங்கிய மனையில், சர்ச் கட்ட அனுமதி வழங்க கூடாது என, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் அருகில், காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன் நகரில் வீட்டு மனைகள் பிரித்துள்ளனர். அதில் ஒரு மனை வாங்கப்பட்டு, சர்ச் கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை.
இப்பகுதியில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எதிர்காலத்தில் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படக் கூடும். எனவே, சர்ச் கட்ட அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

