வி.ஐ.டி., - எம்.ஜி.ஆர்., பல்கலை சுகாதார ஆராய்ச்சிக்காக ஒப்பந்தம்
வி.ஐ.டி., - எம்.ஜி.ஆர்., பல்கலை சுகாதார ஆராய்ச்சிக்காக ஒப்பந்தம்
ADDED : மே 20, 2025 06:10 AM

சென்னை : செயற்கை நுண்ணறிவு சார்ந்த சுகாதார ஆராய்ச்சிக்காக, வி.ஐ.டி., பல்கலை மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கூட்டு ஆராய்ச்சியை வளர்ப்பது, பிஎச்.டி., மேற்பார்வை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்கள் சமர்ப்பித்தல், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் காப்புரிமை போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்.
அத்துடன், வி.ஐ.டி., மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இணைந்து, சுகாதாரத் துறையில் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.
இது குறித்து, வி.ஐ.டி., துணைத் தலைவர் செல்வம் கூறுகையில், ''இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் வளர்ச்சி மற்றும் பொது சுகாதார இலக்குகளுடன் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை இணைப்பதில், வி.ஐ.டி.,யின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,'' என்றார்.