ADDED : டிச 28, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிக்கை:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அரசின் அட்டூழியங்களாலும், அலட்சியத்தாலும், சோர்ந்து போயிருக்கும், தமிழக மக்களின் விரக்திக்காக குரல் கொடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ., நீதிக்காக போராட ஒன்றுபட்டு நிற்கிறது. சாதாரண மக்களின், குறிப்பாக பெண்களின் குரல்களை வலுப்படுத்துகிறது.
ஒன்றாக இணைந்து, மக்களின் நலனுக்கு பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

