உள்ளடக்கத்திற்கு செல்ல

வாக்காளர் விண்ணப்பங்கள் 75.93 சதவீதம் பதிவேற்றம்
வாக்காளர் விண்ணப்பங்கள் 75.93 சதவீதம் பதிவேற்றம்
ADDED : நவ 29, 2025 05:23 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள், 75.93 சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.
அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. தற் போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில், 6 கோடியே 27 லட்சத்து 43,468 விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. இதுவரை 4.87 கோடி விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, 75.93 சதவீதம். இப்பணி லட்சத்தீவில் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
