வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு: தி.மு.க., - ஐ.டி., அணி தலையீடு
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு: தி.மு.க., - ஐ.டி., அணி தலையீடு
ADDED : நவ 11, 2025 06:53 AM

திருச்சி: திருச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, தி.மு.க.,வின் ஐ.டி., அணியைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில், முடிகண்டம் பகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர் வி.ஏ.ஓ., முத்தமிழ்செல்வி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், தி.மு.க.,வின் ஐ.டி., விங்கை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர், வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.
ஓட்டுச்சாவடி அலுவலர் இல்லாமல், அரசியல் கட்சியின் ஐ.டி., விங்கை சேர்ந்த பெண் அந்த பணியில் ஈடுபட்டது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பினர். அதன் பின், அந்தப் பெண் பணியாளரை, திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேட்டால், 'அப்படியொரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை' என பதில் அளிக்கின்றனர்.

