ADDED : செப் 02, 2026 06:56 AM

ச ட்டசபையில், கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:
நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு, அடிப்படைக் கூலியில் 10 சதவீதம், அகவிலைப் படியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்
கைத்தறி ஆதரவு திட்டத்திற்கு, 2.50 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்ப்பூரில் அமைக்கப்படும், கைத்தறி பட்டுப் பூங்காவில், 2 கோடி ரூபாயில், காஞ்சிபுரம் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்படும்
ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க, ஒரு கோடி ரூபாயில், இயற்கை சாயச்சாலை நிறுவப்படும்
கோ - ஆப்டெக்ஸில் புதிய ஆடை வடிவமைப்புகள் மற்றும் நவீன கைத்தறி ரகங்கள் உருவாக்கப்பட்டு, சந்தைப்படுத்தும் நடவடிக்கை, 1.50 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
தமிழகத்தில் பின்னலாடைத் துறையை மேம்படுத்த, தமிழ்நாடு பின்னலாடை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனா மரத்துாரில், 25 லட்சம் ரூபாய் செலவில், ஜவ்வாது மலைத் தேன் உற்பத்தி கூடம் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
