கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறப்பு 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறப்பு 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 15, 2024 06:13 AM
சிதம்பரம்: கனமழை எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து, கடலுார் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
தஞ்சாவூர். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கன மற்றும் மிக கனமழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு 8.00 மணி முதல், அணைக்கரை கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 1000 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
மேலும், அதிகளவு வெள்ள நீர் கீழணைக்கு வரும் நிலை ஏற்பட்டால், கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ள உபரி நீர் அதிகமாக வெளியேற்றக்கூடும்.
எனவே கடலுார், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் கொள்ளிடக்கரையோர கிராம மக்கள் மற்றும் ஆற்றங்கரையோர விவசாயிகள் அறியும் வகையில், கொள்ளிடக்கரை கிராமங்களில் வருவாய் துறையினர் மூலம் அறிவிப்பு செய்திட உத்திரவிட்டு, உதவிசெயற்பொறியாளர்.
கொள்ளிடம் வடிநில உபகோட்டம் காந்தரூபன் உத்தரவிட்டுள்ளார்.