ADDED : ஆக 11, 2011 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ''ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில், 150 கோடி எக்டேர் தரிசு நிலம் விளைச்சல் நிலமாக மாற்றப்பட்டுள்ளது,'' என, லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.அவர் மேலும் கூறுகையில், ''ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், மாநிலம் வாரியாக இலக்கு வைத்து செயல்படாமல், எங்கு இத்திட்டம் தேவை என்பதை உணர்ந்து செயல்படுத்தப்பட்டது.
கடந்த 2010-2011ம் ஆண்டில் தரிசு நில மேம்பாட்டில் அதிகம் பயனடைந்த மாநிலம் ஆந்திரா. இங்கு, 7.24 எக்டேர் நிலம் விளைநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக பீகாரில் 0.88 லட்சம் எக்டேர் விளைச்சல் நிலமாகியுள்ளது,'' என்றார்.