உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 02, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ.,2) மாலை அதிகரித்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழையால் அக்., 18ம் தேதி காலை, 433 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து மாலை, 4:00 மணிக்கு, 4,738 கனஅடியாகவும், அக்., 19 காலை, 5,501 கனஅடியாகவும் அதிகரித்தது.
அதன்பின் நீர்வரத்து சரிந்த நிலையில், மீண்டும் தீவிரமடைந்த மழையால் இன்று காலை வினாடிக்கு, 2,392 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து மாலை, 4:00 மணிக்கு, 3,048 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து பாசனத்துக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம், 55.77 அடியாகவும், நீர் இருப்பு, 21.63 டி.எம்.சி.,யாக இருந்தது.
