உள்ளடக்கத்திற்கு செல்ல
மணிமுத்தாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக இன்று நீர் திறப்பு
மணிமுத்தாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக இன்று நீர் திறப்பு
ADDED : நவ 01, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
சென்னை: மணிமுத்தாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக, இன்று முதல் நீர் திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, பெருங்கால் பாசனத்தில் உள்ள, 2,756.62 ஏக்கர் நிலங்களுக்கு, இன்று முதல், 2027 மார்ச் 31 வரை, 151 நாட்களுக்கு, நீர் இருப்பு, நீர் வரத்தை பொறுத்து 417.74 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், கீழ்முகம், தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் உள்ள, 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
★★
