தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்

 விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்

 விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்


UPDATED : பிப் 04, 2026 03:48 PM

ADDED : பிப் 04, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2026 03:48 PM ADDED : பிப் 04, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக மக்களுக்கு மத்திய பட்ஜெட் பெரிய ஏமாற்றம் தந்துள்ளது. வரும் தேர்தலில் மக்கள் இதற்கு தக்க பாடம் கற்பிப்பர். வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக, தி.மு.க.,வில் விரைவில் குழு அமைக்கப்படும். அக்குழு, கூட்டணியின் அனைத்து கட்சியினரிடமும் சுமூகமாகப் பேசி, தொகுதிகளையும், எண்ணிக்கையையும் இறுதி செய்வர். இதில் எந்த சலசலப்புகளும் இருக்காது. சுமூகமாக முடிந்ததும், எதிர் தரப்பினருக்கு ஏமாற்றமாக இருக்கும்.

தேர்தல் நெருங்குவதால், நிறைய பேர் கருத்துக் கணிப்புகளை எடுக்கின்றனர். அந்த கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால், யாரைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுவது இல்லை.

அரசியலில் எங்களுக்கு யாரும் எதிரிகள் அல்ல. எங்களை விமர்சிப்பவர்களைக்கூட, நாங்கள் நண்பர்களாகவே பார்க்கிறோம்; நேசிக்கிறோம்.



- ஸ்டாலின்,

தமிழக முதல்வர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us