'நாங்கள் கட்சியே கிடையாது' பன்னீர்செல்வம் ஒரே போடு
'நாங்கள் கட்சியே கிடையாது' பன்னீர்செல்வம் ஒரே போடு
ADDED : ஜன 22, 2026 02:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது அவரிடம், 'தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்களே. கூட்டணி பேச்சு ஏதும் நடக்கிறதா?' என கேட்டனர். அதற்கு ''தை முடிய, இன்னும் 20 நாட்களுக்கு மேல் உள்ளது; அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம்,'' என்றார்.
தொடர்ந்து, 'இணைப்போ; கூட்டணியோ, இரண்டில் ஒன்றை விரைவாக முடிவெடுக்காததால் தான், உங்களோடு இருந்த பலரும் தொடர்ச்சியாக வெளியேறி வருவதாக சொல்லப்படுகிறதே' என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கும் கூலாக பதில் அளித்த பன்னீர்செல்வம், ''எந்த கட்சியை சொல்றீங்க... நாங்கள் நடத்துவது அரசியல் கட்சியே கிடையாது,'' என்றார்.

