ADDED : மார் 15, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி விட்டு, தன் வீட்டிற்கு செல்ல, அமைச்சர் துரைமுருகன் காரில் ஏறி அமர்ந்த போது, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
பிரதமர் மோடியின் உயிருக்கு அமைச்சர் அன்பரசன் அச்சுறுத்தியதாக, அவர் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பற்றி?
அதற்கு அமைச்சர் அன்பரசன் பதில் அளிப்பார்.
காங்கிரஸ், ம.தி.மு.க., எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது எப்போது இறுதி செய்யப்படும்?
'யாம் ஒன்றும் அறியோம் பராபரமே' கூட்டணி விவகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
தி.மு.க., வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் வாக்குறுதி எப்போது வெளியிடப்படும்?
உரிய நேரத்தில் வரும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

