ADDED : மார் 13, 2024 06:49 PM

சென்னை: பலமான கூட்டணி வைத்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள். நாங்கள்
மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என அ.தி.மு.க, பொதுச்செயலர்
பழனிசாமி கூறினார்.
ரமலான் பண்டிகையையொட்டி சென்னை
எழும்பூரில் அ.தி.மு.க, சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுஅ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினர் எந்த வித அச்சமின்றி பாதுகாப்புடன்
இருந்தனர்.
வரும் தேர்தலில்
பலமான கூட்டணி அமைத்துள்ளதாக சிலர் கூறி வருகிறார்கள். நாங்கள் மக்களோடு
கூட்டணி அமைத்துள்ளோம். ஆட்சியில் இல்லாத போது ‛‛கோபேக் மோடி''
என்பதும், ஆட்சியில் இருக்கும் போது ‛‛வெல்கம் மோடி'' என்பதும்
தி.மு.க.,வின் வாடிக்கையாக உள்ளது.தீய சக்திகளை விரட்டுவோம் மனித நேயத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.

