ADDED : பிப் 13, 2024 07:16 AM
சென்னை: தி.மு.க.,விடம் நான்கு லோக்சபா தொகுதிகளை கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டியல் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக,தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான பேச்சு, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரும், வி.சி., கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், எம்.பி., ரவிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பேச்சுக்கு பின், திருமாவளவன் கூறியதாவது: சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு, அதில் மூன்று தொகுதிகள் கேட்டுள்ளோம்.
பொது தொகுதிகளில், பெரம்பலுார், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில், ஏதேனும் ஒன்று வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
அடுத்தகட்ட பேச்சில், தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பின்னர் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.