sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது: அண்ணாமலை

/

எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது: அண்ணாமலை

எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது: அண்ணாமலை

எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது: அண்ணாமலை

8


UPDATED : மார் 04, 2025 05:13 PM

ADDED : மார் 04, 2025 04:01 PM

Google News

UPDATED : மார் 04, 2025 05:13 PM ADDED : மார் 04, 2025 04:01 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது. எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம். இ.பி.எஸ்., அளித்த பேட்டி குறித்து எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்: அனைவரது நோக்கமும் திமுக.,வை வீட்டிற்கு அனுப்புவது தான். இன்னும் 6 மாதம் உள்ளது. மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிக்கிறது. இன்றைக்கு இது தேவையில்லாத விஷயமாக பார்க்கிறேன். ஏனென்றால், பா.ஜ., வளர்ந்து வருகிறது. கட்சியை வளர்ப்பதற்கு இது முக்கியமான நேரமாக பார்க்கிறோம். கடினமாக உழைக்கிறோம். தேர்தலுக்கான நேரமும், சூடும் இன்னும் வரவில்லை. வரும் போது பேசுவோம். தேஜ கூட்டணி வலிமையடைந்து வருகிறது.

கண்ணாடியை பார்த்து முதல்வர் பேசுகிறாரோ என சந்தேகம் உள்ளது. மொழியை யாரும் திணிக்கவில்லை. பல பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் மட்டும் உங்கள் மொழிக் கொள்கையை திணிக்காதீர்கள் என சொல்கிறோம். 2020 வரை மூன்றாவது மொழி திணிக்கப்பட்டது. பிறகு ஒரு வாய்ப்பாக வருகிறது.

எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது என தெரியாது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து கற்பனையாக அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. எந்த தகவல் அடிப்படையில் கூட்டம் நடக்கிறது. அதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது. மக்கள் தொகை முகாந்திரம் இல்லை என சொல்லிய பிறகும் முதல்வர் திசை திருப்புகிறார். மக்கள் பிரச்னையை திசை திருப்புகிறார்.

திமுக., வீட்டிற்கு அனுப்ப வேண்டும் போகணும். பா.ஜ., வளர்ந்து வருகிறது. எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. இந்த கட்சி வளர வேண்டும். கூட்டணியில் யார் வருவார்கள் என்பது குறித்து வரும் காலத்தில் பேச வேண்டும்.

திமுக.,வினர் கடத்தலில் ஈடுபடுகின்றனர். மீனவர் என்ற போர்வையில் தி.மு.க.,வினர் போதைப் பொருட்களை கடத்தி, மீனவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். மீனவர் பெயரை பயன்படுத்தி திமுக.,வினர் கடத்தலில் ஈடுபடுகின்றனர். நல்ல மீனவர்களும் கைதுசெய்யப்படுவார்கள். ஊழல் செய்பவர்களுக்கு கண் தெரியாது. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரியாதா இவ்வாறு அண்ணாமலை கூறினார்.கோவை: ''கூட்டணி குறித்து அவசரத்தில் பேச முடியாது. இரண்டு நாட்களில் அமித்ஷா தமிழகம் வரும் போது மாற்றங்கள் வரும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

மாற்றம் வரும்


சிவராத்திரி அன்று கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்ததாக தகவல் வெளியானது.

பதில்



இதனைத் தொடர்ந்து பா.ஜ., உடனான கூட்டணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அளித்த பதில்: தி.மு.க.,வை வீழ்த்த தயார். ஒரே எதிரி தி.மு.க., தான். மற்ற எந்தக் கட்சியும் கிடையாது. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான் குறிக்கோள். ஓட்டுகள் சிதறாமல் ஒருங்கிணைத்து மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்றுவது தான் அ.தி.மு.க.,வின் தலையாய கடமை. அது 2026 ல் நடக்கும்.

பா.ஜ., குறித்து ஆறு மாதங்கள் கழித்து கேளுங்கள். எல்லாம் யூகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யார் யார் இங்கு இருக்கிறார்கள். யார் யார் அங்கு இருக்கிறார்கள் என்பதற்கு 6 மாதத்திற்கு முன் பதில் சொல்லப்படும். மறைமுகமாக செய்ய முடியாது. எல்லாம் வெளிப்படையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றம்

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கூட்டணி குறித்து அவசரத்தில் பேசினால் தவறாக போய்விடும். இது அவசரத்தில் பேசும் விஷயம் கிடையாது. நாளை மாலை நான்கு மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அனைத்து விஷயங்களுக்கும் பதில் சொல்லப்படும். அமித்ஷா இன்னும் இரண்டு நாளில் தமிழகம் வருகிறார். அப்போது எத்தனை மாற்றம் வருமோ. வேலுமணி அழைத்ததால், அவரது இல்லத் திருமண விழாவில் பங்கேற்றேன். திருமண விழாவிற்கு போனது தவறா. இ.பி.எஸ்., வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us