எப்படி தண்ணீர் பெறுவது என எங்களுக்கு தெரியும்: கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்
எப்படி தண்ணீர் பெறுவது என எங்களுக்கு தெரியும்: கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்
ADDED : மார் 13, 2024 12:27 PM

வேலூர்: கர்நாடகாவில் இருந்து எப்படி காவிரி தண்ணீரை பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வரும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில், ''தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல'' எனக் கூறினார்.
இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ''என்றைக்காவது அவர்களின் (கர்நாடகா) வாழ்க்கையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறோம் எனக் கூறியதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? எப்போதுமே அவர்கள் இதையே தான் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றுதான் தண்ணீர் பெற்று வருகிறோம். தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்'' என பதிலளித்தார்.

