உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 05, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
தி.மு.க.,வை அழிப்பதற்குத்தான் விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்தார் என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது கருத்து. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும், தே.மு.தி.க., நட்பாகவே உள்ளது. இதில், மாநில கட்சி, தேசிய கட்சி என, வேறுபாடு கிடையாது.
அரசியல் நிலைப்பாட்டில் மட்டுமே, வேறுபாடு இருக்கும். தே.மு.தி.க., எதிர்காலம் கருதி, கட்சியினர் விருப்பப்படி, கூட்டணி முடிவை எடுப்போம். ஒரு கட்சியை விமர்சித்து பேசினால், அந்த கட்சிக்கு எதிரி என்று அர்த்தம் இல்லை. கனிமொழி, தமிழிசை, வானதி ஆகிய பெண் தலைவர்களுடன், நான் நட்பாகவே இருக்கிறேன்.
- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,
