'கடவுள் நம்முடன் இருக்கும் போது தொடர்ந்து நடைபோட வேண்டும்'
'கடவுள் நம்முடன் இருக்கும் போது தொடர்ந்து நடைபோட வேண்டும்'
ADDED : ஜன 05, 2025 01:53 AM

கோவை:தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்., பதிப்பகத்தின் எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி எழுதிய 'கிருஷ்ணாஸ் கிஸ்' - கடவுள் எழுதிய காதல் கடிதம் பகவத் கீதை' எனும் புத்தக வெளியீட்டு விழா கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் அரங்கில் நடந்தது.
புத்தகத்தை சக்தி குழுமம் தலைவர் மாணிக்கம் வெளியிட பெங்களூருவை சேர்ந்த லலிதா சிவகுரு பெற்றுக் கொண்டார்.
சக்தி குழுமம் தலைவர் மாணிக்கம் பேசியதாவது:
ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. கிருஷ்ணன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருத்துக்கள் உள்ளன. அவர் கூறிய கருத்துக்கள் அற்புதமானவை.
அன்று இருந்த மக்கள் கூறியதை எப்படி நம்புவது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.
அன்று கூறிய வார்த்தைகள் தான் இன்று பின்பற்றப்படுகின்றன. கடவுள் நம்மிடம் உள்ளார். அவரை கூப்பிட தேவையில்லை. கடவுள் நம்முடன் இருக்கும் போது தொடர்ந்து நடைபோட வேண்டும். யோகியாக இருந்தாலும் ஐம்புலன்கள் நம்மை கலைக்கும். அதை நீக்கி காக்கும் பொறுப்பு கடவுளுக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
மகாசக்தி குழும நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் வரவேற்றார். இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், மதுரை ஆடிட்டர் சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி ஏற்புரை வழங்கினார்.

