ADDED : நவ 18, 2025 06:44 AM

இளைஞர்கள் சினிமா நடிகர் பின்னால் செல்வதாக சொல்கின்றனர்; அப்படியெல்லாம் இல்லை. கொள்கை அடிப்படையில், வி.சி.,யை இளைஞர்கள் ஏற்று வருவது அதிகரித்துள்ளது. எந்த ஊருக்கு நான் சென்றாலும், அரை மணி நேரத்தில் 100 பேர் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர்.
அனைவருக்குமான இயக்கமாக வி.சி., செயல்பட்டு வருகிறது. அத்தனை கோரிக்கை களையும் அரசு நிறைவேற்றுமோ, இல்லையோ, இவ்வளவு கோரிக்கைகள் தொழிலாளர்களிடம் உள்ளது என்பதை, அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வேன்.
அரசிடம் கோரிக்கைகளை யார் வைத்தாலும், அவை உடனடியாக நிறைவேற்றப்பட்டு விடாது. கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை, நாம் துடிப்போடு செயல்பட வேண்டும். தேவைப்படும்போது போராட வேண்டும்; போராட முடியாமல் வாழ முடியாது. என்ன தேவை என உணரும்போது, போராட துாண்டும்; அவற்றால் தான் ஆட்சியாளர்களை அசைக்க முடியும்.
- திருமாவளவன்
தலைவர், வி.சி.,

