ADDED : அக் 30, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் பொறியியல் படித்த இளைஞர்கள், முதுகலை பட்டதாரிகள், வெளிநாடுகளில் பணி செய்து விட்டு, தாயகம் திரும்பிய இளைஞர்கள் ஆகியோர் விவசாயத்தில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக நிலம் வாங்குகின்றனர்; குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்கின்றனர்.
இந்த இளைஞர்களுக்கு, தமிழக அரசின் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத் துறை ஆதரவு அளித்து, வழிகாட்ட வேண்டும். அப்படி செய்தால்தான், விவசாயத்தில் அவர்கள் லாபம் பெற முடியும்.
விவசாயத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். பண்ணைகுட்டையில் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக ஒரு திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
- ராமதாஸ்
நிறுவனர், பா.ம.க.,

