ADDED : ஜூலை 04, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'லாக் அப்' மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள், தி.மு.க., அரசின் தோல்வியை காட்டுகின்றன. இதற்கு, முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
லாக் அப் மரணங்கள் மட்டுமின்றி, வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது.
போதைப் பொருள் விவகாரத்தில் சினிமா துறையினரை மட்டுமே குறை சொல்ல முடியாது. பள்ளி, கல்லுாரி உட்பட பல இடங்களிலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளது.
சினிமாவில் உள்ளவர்களும் சராசரி மனிதர்கள் தான். அவர்களுக்கும் போதை பழக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தடுக்க என்ன வழி என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.
- நடிகை குஷ்பு