sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கணவர் 'இறந்ததாக' வாக்காளர் பட்டியல்; கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்  

/

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கணவர் 'இறந்ததாக' வாக்காளர் பட்டியல்; கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்  

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கணவர் 'இறந்ததாக' வாக்காளர் பட்டியல்; கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்  

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கணவர் 'இறந்ததாக' வாக்காளர் பட்டியல்; கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்  


UPDATED : டிச 09, 2025 08:11 AM

ADDED : டிச 09, 2025 03:38 AM

Google News

UPDATED : டிச 09, 2025 08:11 AM ADDED : டிச 09, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா, அவரது கணவர் ரமேஷ் இறந்து விட்டதாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான பட்டியலில் வெளியானதால், நேற்று கலெக்டர் பொற்கொடியை முற்றுகையிட்டு அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா. இவரது கணவர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். இவர்கள் சிவகங்கை சாஸ்திரி 5 வது தெருவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அப்பகுதி ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைத்து விட்டனர். வாக்காளர்கள் உறுதிப்படுத்தும் நோக்கில் நிரந்தரமாக இடம் மாற்றம் செய்தவர்கள், இறந்தவர்கள் அடங்கிய பட்டியலை நகராட்சி சார்பில் பூத் ஏஜன்ட்களுக்கு வழங்கினர். கட்சியின் பூத் ஏஜன்டான ரமேஷ் பட்டியலை ஆய்வு செய்த போது, அவரும் இந்துஜாவும் இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.Image 1505824

இதையடுத்து கலெக்டர் பொற்கொடியிடம் புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகாரை எழுத்து பூர்வமாக தாருங்கள், பட்டியலில் பெயரை சரி செய்து தருகிறேன். அஜாக்கிரதையாக பணிபுரிந்த அப்பகுதி ஓட்டுச்சாவடி அலுவலரை சஸ்பெண்ட் செய்கிறேன் என கலெக்டர் உறுதியளித்தார்.

இந்துஜா கூறியதாவது: ஆளுங்கட்சியினர் அழுத்தம் காரணமாக வேட்பாளரான என்னையும், என் கணவர் பெயரையும் இறந்தவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். இது போன்று பலரை இறந்து விட்டதாக பட்டியலில் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் செய்து போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us