ADDED : செப் 04, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க.,வில் இருந்து பலரும் விலகி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறக்கப் போவதாக கூறியுள்ளாரே என்றும், தி.மு.க., பக்கம் அவரை வரவேற்பீர்களா என்றும் பலரும் என்னிடம் கேட்கின்றனர்.
அவர் முதலில் கருத்து சொல்லட்டும்; அதன் பின், என்ன நடக்கலாம் என்பது குறித்து பேசலாம். மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலு ம், தி.மு.க., இன்முகத்தோடு வரவேற்கும். எதுவும் வற்புறுத்தியோ, நிர்ப்பந்தப்படுத்தியோ நடக்கக்கூடாது; இயல்பாக நடக்க வேண்டும்.
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தோர் என 459 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறிழைப்போர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
- முத்துசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,