ADDED : செப் 06, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதே கருத்தை, இதற்கு முன்பாகவும் சிலர் வலியுறுத்தி உள்ளனர். கட்சியின் பொதுச்செயலராக இருப்பவர் பழனிசாமி. அவர் எடுக்கும் முடிவுதான், கட்சியில் இறுதியானது.
அவர், என்ன வேண்டுமானாலும் கட்சியின் நலனுக்காக முடிவெடுக்கலாம். அதற்கான உரிமை அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு கட்சியில் இருப்போர் அனைவரும் கட்டுப்படுவோம். அதுதான், தொண்டர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும், கருத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.