உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 28, 2026 11:06 PM
அ நிறம் | அளவு
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - அப்துல் வகாப்: த.வெ.க., தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய், இளைஞர்களுக்கு மாதம், 4,000 ரூபாய் வழங்கப்படும் என, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆட்சி அமைத்து, 100 நாட்களுக்கு மேலாகியும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பட்ஜெட்டில் இதற்கான எந்த அறிவிப்பும் இல்லை, இது அப்ரன்டீஸ் அரசாக உள்ளது.
அமைச்சர் ஆனந்த்: எங்கள் தேர்தல் அறிக்கையை, எதிர்க்கட்சியினர் பட்டியலிடுவதை வரவேற்கிறேன். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்து, 100 நாட்கள் தான் ஆகின்றன. அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். இப்போது தான் ஒவ்வொன்றாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
