ADDED : ஆக 10, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், போலி வாக்காளர்களை சேர்க்காமல் தடுப்பதில், மிக கவனமாக இருப்போம். தி.மு.க., தலைமை, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
மிக முக்கியமாக, வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வேலைக்கு வந்தவர்களில், நிரந்தர முகவரி இல்லாதவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக கண்காணித்து வருகின்றனர். வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
- நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,