தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றினால் தான் நமக்கு மரியாதை
தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றினால் தான் நமக்கு மரியாதை
ADDED : ஜன 16, 2024 07:03 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், கபாடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழ் மொழி கலாச்சாரத்திலும், கால அடிப்படையில் பழமையான மொழி . தமிழர் திருநாளான பொங்கல் தின விழாவை இன்று கிராமம், நகரம், பள்ளி, கல்லூரி என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழை நாம் எல்லாம் கொண்டாடினாலோ, உதட்டு அளவில் பேசினாலோ மட்டும் போதாது தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கினால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்