ADDED : டிச 21, 2025 01:17 AM
கள்ள ஓட்டு போடுவதில் கைதேர்ந்தவர்கள், தி.மு.க.,வினர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் என, ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இல்லாத ஓட்டுகளை வைத்து தான், இதுவரை தி.மு.க., மாயாஜாலம் செய்து வந்தது. தற்போது, அவர்களின் சாயம் வெளுத்து விட்டது.
இனி, மூன்று அமாவாசைக்கு பின் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில், ஒரு கோடி ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; உண்மையான ஜனநாயகம் மலரும். சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் தான் போட்டி என விஜய் கூறி வருகிறார். இவ்வாறு சொல்ல வேண்டும் என்பது அவருக்கான உத்தரவு. தேர்தல் முடிவு வந்த பின், அவரது நிலையை அவர் உணர்வார்.
- ஜெயராமன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

