இ.பி.எஸ்.,ஐ நாங்கள் நினைத்திருந்தால் நீக்கி இருப்போம்: தினகரன்
இ.பி.எஸ்.,ஐ நாங்கள் நினைத்திருந்தால் நீக்கி இருப்போம்: தினகரன்
ADDED : மார் 29, 2024 01:31 PM

உசிலம்பட்டி: ‛‛ எங்களிடம் இருந்த 21 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் மனு கொடுத்ததை சரியாக செயல்படுத்தி இருந்தால், முதல்வர் பதவியில் இருந்து இ.பி.எஸ்.,ஐ நீக்கி இருப்போம்'' என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
தேனி தொகுதியில் போட்டியிடும் தினகரன், உசிலம்பட்டி அமமுக செயற்வீரர்கள் கூட்டத்தில் பேசியதாவது: அமமுக பாஜ., இயற்கையாக உருவான கூட்டணி. இபிஎஸ் ஆட்சியை ஜெயலலிதா ஆட்சி எனக்கருதி பாஜ., காப்பாற்றி கொடுத்தது. 2017 ல் நாம் இபிஎஸ் ஐ ஊதித்தள்ளி இருப்போம்.
அவர்கள் நமக்கு எதிராக இருந்தார்கள் என்பதைவிட ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை தொடர வேண்டும் என அவர்களை பாதுகாத்தனர். ஆனால், இபிஎஸ் கட்சியை விட்டு நம்மை நீக்கி துரோகம் செய்ததுடன், 4.5 ஆண்டு ஆட்சி தொடர காரணமாக இருந்த ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கினார்.
ஓபிஎஸ் 11 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால், டில்லி அவர்களை பாதுகாக்கவில்லை என்றால், நம்மிடம் இருந்த 21 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் மனு கொடுத்ததை சரியாக செயல்படுத்தி இருந்தால் இபிஎஸ்.,ஐ மாற்றிவிட்டு வேறு நபரை முதல்வராக கொண்டு வந்து இருக்க முடியும். இவ்வாறு தினகரன் பேசினார்.

