பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுங்க: மா.சுப்பிரமணியன்
பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுங்க: மா.சுப்பிரமணியன்
ADDED : ஜன 03, 2024 01:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ‛‛இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரசால் தமிழகத்தில், 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை.வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மழையால் ஏற்படும் காய்ச்சல் எதுவும் இல்லை. கவலைப்படும் வகையில் பாதிப்புகள் எதுவும் இல்லை. மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.