வெள்ளை சேலை உடுத்தி தொழு முன் வெண் பொங்கல் வைத்து வழிபாடு கரும்பு ரூ.50,000 வரை ஏலம் போகும்
வெள்ளை சேலை உடுத்தி தொழு முன் வெண் பொங்கல் வைத்து வழிபாடு கரும்பு ரூ.50,000 வரை ஏலம் போகும்
ADDED : ஜன 16, 2024 11:36 PM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சலுகைபுரத்தில் 9 வது தலைமுறையை சேர்ந்த குடும்பத்து பெண்கள் வெள்ளைசேலை உடுத்தி, சுவாமிக்கு வெண் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இங்கு ஒரே சமூகத்தை சேர்ந்த 46 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டு தோறும் மாட்டு பொங்கல் அன்று மாட்டு தொழுவிற்கு முன் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி, விரதமிருந்து வெண் பொங்கல் வைத்து வழிபடுவர். நேற்று மாட்டு பொங்கலையொட்டி இக்கிராமத்தில் 35 பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைக்க மண் பானைகளுடன் வீட்டிற்கு முன் காத்திருந்தனர்.
சாமியாடிகள் வீடு தோறும் சென்று, அவர்களை தொழு பொட்டலுக்கு அழைத்து வந்தனர். பொங்கல் வைக்கும் மண் பானைகளுடன் ஊர்வலமாக சென்று மதியம் 12:30 மணிக்கு வெண் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி வழிபட்டனர். பின்னர் தொழுவில் இருந்த கால்நடைகளுக்கு பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

