தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வலை வளை: அக். 11

வலை வளை: அக். 11

வலை வளை: அக். 11


UPDATED : அக் 11, 2026 12:00 AM

ADDED : அக் 10, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:00 AM ADDED : அக் 10, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் முன்னேற்றம்

போலந்து பெண் ஆச்சர்யம்

போ லந்து நாட்டை சேர்ந்த டோமினிகா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு அவசரமாக போட்டோ பிரின்ட் போட வேண்டியிருந்தது. ‘பிளிங்கிட்’ செயலியில் மூன்று விதமான தன் படங்களை கொடுத்து அச்சிடுவதற்கு ஆர்டர் செய்தார். அவருக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில், 21 நிமிடங்களில் அந்த படங்கள் அவர் இருந்த இடத்தில் டெலிவரி செய்யப்பட்டன.

‘இந்தியா, டிஜிட்டல் ரீதியாக முன்னேறியிருக்கிறது என்று தெரியும். ஆனால், இத்தனை துாரம் முன்னேறியிருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. வெறும் 100 ரூபாயில் இவ்வளவு வேகத்தில் படங்களை பிரின்ட் போட்டு அனுப்பி விட்டனர்’ என்கிறார், டோமினிகா. அவரது வீடியோ, இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

சின்னப்பெண்ணுக்கு

ஆயுசு ரொம்ப கெட்டி

ம ஹாராஷ்டிரா மாநிலம் ஸ்ரீராம்பூரில் ஸ்கூட்டரில் வந்த குட்டிப்பெண் ஒருவர் மீது, குறுக்குப்பாதையில் திடீரென வந்த லாரி மோதி விட்டது. கண நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அந்த பெண், லாரியின் பம்பரை பிடித்து தொங்கி தப்பி விட்டார். லாரி நின்றவுடன், அதில் இருந்து அந்தப்பெண் எந்த காயமும் இன்றி இறங்கி நடந்து செல்லும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. அதைக்கண்ட வலைதள பிரியர்கள், ‘அந்தப்பெண்ணுக்கு ஆயுசு கெட்டி’ என்றும், ‘மறு பிறவி எடுத்து விட்டார்’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

‘வடாபாவ்’ இல்லாவிட்டால்

வாழ்க்கை நின்றுவிடாது

உ ணவு விதிமுறைகளை கண்டிப்புடன் அமல் செய்யும் மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு கமிஷனர் துக்காராம் முண்டேவிடம் பள்ளி மாணவர் ஒருவர், ‘மீண்டும் பள்ளி அருகே வடாபாவ் விற்பனைக்கு அனுமதிப்பீர்களா; நானும் என் நண்பர்களும் விரும்பி சாப்பிடுவோம்’ என்று கேட்டார். மாணவருக்கு, பொறுமையுடன் பதில் அளித்தார் துக்காராம்.

‘வடா பாவ் சாப்பிடவில்லை என்றால் நம் வாழ்க்கை நின்றுவிடாது. சத்தான உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புரதச்சத்து நிறைந்ததை சாப்பிடுங்கள். சுவையை விட ஆரோக்கியமான உணவு தான் உடலுக்கு முக்கியம்’ என்று மாணவனுக்கு துக்காராம் அறிவுரை கூறும் வீடியோ, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

வேறெதுவும் தேவையில்லை

நீ மட்டும் போதும்!

ரா ஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தனியார் வங்கியின் இரவு காவலராக வேலை பார்க்கும் கணவருக்கு உணவு கொண்டு வருகிறார், அவரது மனைவி. இருவரும் பூட்டிய வங்கியின் ஷட்டர் முன், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து சாப்பிடும் அந்த வீடியோ, வலைதளங்களில் கவனம் பெற்றது.

‘தொழில், அந்தஸ்து, பணத்தைக் கொண்டே உறவுகள் மதிப்பிடப்படும் இந்தக் காலத்தில், வங்கி காவலரிடம் குறைவான வசதிகளே இருக்கலாம்; ஆனால், வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. சில பந்தங்கள் பூமியில் உருவாவதில்லை; அவை சொர்க்கத்தில் எழுதப்படுபவை’ என்று வீடியோவுடன் ஞானானந்த் பட் என்பவர் பதிவு வெளியிட்டார். வலைதள பிரியர்கள், ‘வாழ்க்கை நடத்துவதன் அர்த்தம் இதுதான்’ என்றும், ‘உண்மையான அன்பு’ என்றும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

கனடா மேயர் தேர்தலில்

கலக்கும் இந்திய பெண்

க னடாவில் வசிக்கும் இந்திய பெண் தீபிகா தமர்லா, அந்நாட்டின் மஸ்சிசவுகா நகர மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். பிரசாரத்தில் இறங்கியவர், நம்ம ஊர் பாணியையும் கையில் எடுத்து விட்டார். பிரபல ஹிந்தி பாடலின் டியூனை காப்பி அடித்து, வரிகளை உல்டா செய்து அவர் தயார் செய்த வீடியோ, வலைதளங்களில் பரவியது.

‘யெ ராஹா மேரா வாதா’ என்று ஆடிப்பாடும் அவர், ‘நான் வெற்றி பெற்றால் சொத்து வரியை உயர்த்த மாட்டேன்’ என்று பாடல் வழியாக வாக்குறுதி அளிக்கிறார். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us