தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வலை வளை: அக். 13

வலை வளை: அக். 13

வலை வளை: அக். 13


UPDATED : அக் 13, 2026 12:00 AM

ADDED : அக் 12, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:00 AM ADDED : அக் 12, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவராத்திரி விழாவில்

சுவிஸ் துாதர் நடனம்

இ ந்தியாவுக்கான ஸ்விட்சர்லாந்து துாதர் மாயா டிஸாபி, குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பாரம்பரிய நடனம் ஆடினார்.

லெஹங்கா அணிந்தபடி அவர் ஆடிய நடனம், வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ‘நவராத்திரியின் உணர்வுகளை கொண்டாடும் எழுச்சியூட்டும் மாலைப்பொழுது. இங்கு வெளிப்பட்ட ஆற்றலும் ஒற்றுமையும், மெய் சிலிர்க்க வைக்கின்றன. தலைமுறைகளையும், எல்லைகளையும் கடந்து மக்களை இணைக்கும் சக்தியை, நவராத்திரி விழா பிரதிபலிக்கிறது’ என்று கூறியுள்ளார் மாயா டிஸாபி.

‘கூல்’ தோனியுடன் சந்திப்பு

ஏர் ஹோஸ்டஸ் குதுாகலம்

இ ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, விமான பணிப்பெண் ஒருவர் சந்தித்த வீடியோ வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. ஐஸ்வர்யா சிங் என்ற அந்த பணிப்பெண், தோனி யை சந்தித்த மகிழ்ச்சியில் அவரிடம் உரையாடுகிறார். தன் அன்றாட வேலைகள் என்னென்ன என்பதை பட்டியலிடுகிறார்.

அவர் பேசுவதை கூர்ந்து கவனித்த ‘கூல் கேப்டன்’ தோனி, கடுமையான வேலைப்பளுவிலும் சிறப்பாக பணியாற்றுவதற்கு அவருக்கு டிப்ஸ் கொடுத்தார். அவரை மகிழ்விக்க, ஜோக் ஒன்றையும் சொல்கிறார் தோனி. ‘என் கனவு நிஜமானது’ என்று கூறி ஐஸ்வர்யா பதிவிட்டுள்ள இந்த வீடியோவை, 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

யூ டியூபரின் ஜாலி ஓட்டம்

‘டி ல்லி போராட்டத்தில் கலந்து கொண்டால், ஏதாவது கன்டென்ட் தேற்றி வீடியோ போடலாம்’ என்று வரக்கூடிய யூ டியூபர்கள் ஏராளம் உள்ளனர். அப்படித்தான் வந்திருக்கிறார், யூ டியூபர் சோட்டா சேட்டன் என்கிற நிகில் வர்மா. குள்ளமான உருவம் கொண்ட நிகில் , கன்னாட் பிளேஸில் தன்னை தடுக்க முயற்சித்த காவலர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.

அவரை சிறப்பு அதிரடிப்படை காவலர் ஒருவர் துரத்திச்சென்று பிடித்து விட்டார். அப்படியே ‘அலேக்’ ஆக, குழந்தை போல நிகிலை காவலர் துாக்கி வரும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

‘கடைசியாக போலீசார் என்னைப்பிடித்து விட்டனர்’ என, சிரித்துக்கொண்டே சொல்கிறார், நிகில். ‘நீ ரொம்ப பிரபலமாகி வருகிறாயா’ என்று கேட்கிறார், அவரை கைகளில் ஏந்தி வரும் காவலர்.

அங்கிருந்த செய்தியாளர்களிடம், ‘போலீசார் என்னை மிகவும் அன்பாக பிடித்தனர்’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் நிகில்.

பாலங்களில் பல வண்ணம்

ந வராத்திரியை முன்னிட்டு, கொல்கட்டா நகர சாலைகள், மேம்பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசி பொலிவுபடுத்தப்பட்டுள்ளன. கண்ணை பறிக்கும் வண்ணங்களில் பாலங்கள் காட்சியளிக்கும் வீடியோக்கள், வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

என்ன தவம் செய்தனரோ?

‘மை க்ரோசாப்ட் எக்செல் கோபைலட்’ பிரிவில் துணை தலைவராக பணியாற்றியவர் இந்தியர் கேசவன் சண்முகம். 23 ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை பார்த்த அவர், இந்தியாவில் இருக்கும் வயது முதிர்ந்த பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக, பணியில் இருந்து விலகு வதாக, ‘லிங்க்டுஇன்’ தளத்தில் அறிவித்தது பாராட்டை பெற்றுள்ளது.

‘குடும்பத்துக்கு தான் முன்னுரிமை என்று கூறுவதற்கு, அன்பு, தைரியம், இதயம் எல்லாம் சேர்ந்திருக்க வேண்டும்’ என்றும், ‘இப்படி ஒரு மகனை பெற, அந்த பெற்றோர் என்ன தவம் செய்தனரோ’ என்றும், பாராட்டுகின்றனர், வலைதள பிரியர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us