தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிக்கிய பைசல் டைரி நண்பர்களுக்கு வலை

சிக்கிய பைசல் டைரி நண்பர்களுக்கு வலை

சிக்கிய பைசல் டைரி நண்பர்களுக்கு வலை


ADDED : அக் 17, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையில் கைதான, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரிடம் கைப்பற்றிய, ரகசிய டைரியில் உள்ள தகவல்கள் அடிப்படையில், அவரது கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு, மத்திய அரசு தடை விதித்தது.

தமிழகத்தில், இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்தது தொடர்பாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசியர் டாக்டர் ஹமீது உசேன் உட்பட, ஏழுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 10ம் தேதி, சென்னை தரமணியில், முக்கிய குற்றவாளியான பைசல் ரஹ்மான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது ரகசிய டைரி சிக்கியது.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

பைசல் ரஹ்மான், பாகிஸ்தான் ராணுவத்துடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். அவர் தமிழகம் முழுதும் பயணித்து, மாவட்டத்திற்கு, 10 பேர் என, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளார். அவர்களுக்கு ஆயுத பயிற்சியும் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் ரகசிய டைரியில் உள்ளன. அதனடிப்படையில், பைசல் ரஹ்மானின் கூட்டாளிகளை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us