ADDED : அக் 25, 2024 12:39 AM

தீபாவளி பண்டிகைக்கான புது வரவாக, 'தி சென்னை சில்க்ஸ்' அறிமுகம் செய்துள்ள, 'டிஷ்யூ கேண்டிகிரஷ்' புடவைக்கு, பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தி சென்னை சில்க்ஸ் நிறுவனபொது மேலாளர் பா.ரவீந்திரன் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தி சென்னை சில்க்சில், அனைத்து வயதினருக்குமான பல்வேறு வகையான ஆடைகளை அறிமுகம் செய்துள்ளோம்.
மெல்லிய, இலகுரக, 'ஜார்ஜெட்' துணியால் செய்யப்பட்ட, 'பர்பரி ஜார்ஜெட்' புடவையில், 'டிஜிட்டல் பிரின்ட்' வகை அறிமுகமாகி உள்ளது.
அதேபோல், 'டிஷ்யூ பேப்பர்' கசக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, 'டிஷ்யூ கேண்டிகிரஷ்' புடவையையும் வாடிக்கையாளர்கள், குறிப்பாக பெண்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், குடும்ப 'காம்போ' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதில், 1,785 ரூபாய் மதிப்பிலான காட்டன், சிந்தடிக், பேன்சி வகை புடவைகள், 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஆண்களுக்கான, 'ஸ்டிச்லஸ் பேன்ஸி டாப்' அறிமுகம்ஆகியுள்ளது. இந்த ஆடையில், தையல் போட்டு இருப்பது தெரியாது. அதேபோல், குழந்தைகளுக்கு பல்வேறு வகையான ஆடைகள் அறிமுகமாகி உள்ளன.
அவற்றில், 'குர்தீஸ் ஓவர் கோட்' வகை ஆடைகளை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர்.
ஆண்கள், பெண்களுக்கான, 'கார்போ பேகி பாட்டம்' என்ற பேன்ட் ஆடை உள்ளது. ஆண்களுக்கான, 'கன்வெர்ட்டபுள்பாட்டம் பேன்ட்' அறிமுகம் செய்துள்ளோம்.
இவற்றை முழு பேன்ட், முழுங்கால் அளவிலான பேன்ட், டவுசர் வகையிலும் போட்டுக் கொள்ள முடியும். இதில், ஜிப் இருக்கும்; ஆனால் வெளியே தெரியாது.
எங்களிடம் ஆடைகள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், வாங்கும் பொருட்களில் இருந்து, 2 முதல் 5 சதவீதம் வரை பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.