ADDED : செப் 08, 2025 02:09 AM

சமூக நீதி காவலர்களாக தங்களை முன்னிறுத்தி கொண்டு, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தெருவுக்கு தெரு, தங்களின் பிரசார பீரங்கிகளை இறக்கிவிட்ட தி.மு.க., 'ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும், காஸ் சிலிண்டர் மானியமாக, 100 ரூபாய் வழங்கப்படும்' என, வாக்குறுதி அளித்தது.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் கடந்தும், கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதும், ஆட்சி முடிய போகும் இறுதி மாதங்களிலும், தி.மு.க., அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும்.
ஏழை மக்களை இப்படி ஏமாற்றி, அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான், தி.மு.க., ஆட்சியை பிடிக்க வேண்டுமா? அப்படியென்ன பதவி மோகம் என்பது தான், அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக உள்ளது.
இப்படிப்பட்ட மக்கள் விரோத கட்சிக்கு, வரும் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,