ADDED : மார் 02, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், பிப்., 2ல் தாக்கல் செய்யப்பட்டது.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை, தமிழக வெற்றிக் கழகம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. கடந்த பிப்., மாதம், முறையான வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் செய்த பல்வேறு கட்சிகளை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இதுகுறித்த விபரங்கள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
ஆனால், த.வெ.க., பதிவு குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை. எனவே, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்க, நிர்வாகிகள் டில்லி செல்லவுள்ளனர்.

