ADDED : நவ 07, 2025 07:23 AM

உண்மையான சமூக நீதி கட்சி பா.ம.க., எங்கள் கட்சிக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை 1998ம் ஆண்டிலேயே தலித் எழில்மலைக்கு கொடுத்தோம். ஆனால், 1999ல் தான் பட்டியல் சமூகத்தவரை, தி.மு.க., மத்திய அமைச்சராக்கியது. பா.ம.க., பொதுச் செயலராக வடிவேல் ராவணன் இருக்கிறார். தி.மு.க.,வில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு பொதுச்செயலர் பதவி கொடுப்பரா? ஆனால், தி.மு.க., சமூக நீதி பேசுகிறது
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா வளவனை கேட்கிறேன். அவர், அந்த கூட்டணியில் இருப்பது, சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா? கடந்த நான்கரை ஆண்டில், பட்டியல் இன மக்களுக்கு, தி.மு.க., என்ன செய்தது? சண்டை மூட்டி விட்டதை தவிர எதுவும் கிடையாது. தி.மு.க., அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டுமே நிறைவேற்றி உள்ளது; அதாவது, 13 சதவீதம் மட்டுமே.
- அன்புமணி தலைவர், பா.ம.க.,

