ADDED : டிச 30, 2024 02:33 PM

புதுக்கோட்டை: 'காந்தி என்ன சொன்னார்? ஒரு பெண், நடு இரவிலே 12 மணிக்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி விட்டு திரும்பும் நாளன்று தான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார்' என அமைச்சர் ரகுபதி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு ரகுபதி அளித்த பேட்டி: யார் அந்த சார் என அ.தி.மு.க., கேள்வி எழுப்புகிறது. யார் அந்த சார் என்று அந்த சாருக்கு தான் தெரியும். விசாரணைக்கு பிறகு அந்த சார் யார் என்று தெரிய வரும். நாங்கள் அல்ல அந்த சார். காந்தி என்ன சொன்னார்? ஒரு பெண், நடு இரவிலே 12 மணிக்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி விட்டு திரும்பும் நாளன்று தான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார்.
அதை இந்தியாவிலேயே கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அந்த கட்சி தலைவர் (விஜய்) சென்று பார்த்து விட்டு வந்து பேசட்டும். அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது. பத்து மணிக்கு மேல் இரவு அவர்கள் வெளியே நடமாட முடிகிறதா? தயவு செய்து வெளியே போர் பாருங்கள். முதலில் பீஹார், ஒடிசா மாநிலங்களுக்கு சென்று அவர் பார்த்துவிட்டு வந்து கூறட்டும்.
நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று சொல்லும் அவருக்கு நாங்கள் இதை தான் பதிலாக சொல்கிறோம். தயவு செய்து வெளியே போய் பாருங்கள். இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று நாங்கள் நிரூபிக்கின்றோம். மக்கள் எங்களை நம்புவார்கள். மக்கள் மத்தியில் நாங்கள் விளக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

