மூடிக்கிடக்கும் என்.டி.சி., மில்களின் எதிர்காலம் என்ன? காத்திருக்கின்றனர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
மூடிக்கிடக்கும் என்.டி.சி., மில்களின் எதிர்காலம் என்ன? காத்திருக்கின்றனர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
ADDED : ஏப் 14, 2025 08:52 AM

கோவை: கோவையிலுள்ள என். டி.சி., மில்கள் 2020, மார்ச் 23ம் தேதிக்குப் பிறகு மூடிக் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசு இவற்றை மீண்டும் திறப்பதாக இல்லை.
தொழிற்சங்கங்களின் வலியுறுத்தலை அடுத்து, மூன்று மில்களை மட்டும் இயக்கலாம் என உத்தரவாதம் தந்தாலும், அதில் இருந்து பின்வாங்கி விட்டது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட, இந்த என்.டி.சி., மில்கள் மற்றும் அவற்றை நம்பியிருந்த தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? தொழில்துறையினரிடமும், தொழிற்சங்கத்தினரிடமும் பேசினோம்.
விதைபோட்ட தமிழகம்
1960களின் பிற்பகுதியில் கோவையில் சோம சுந்தரா மில் உட்பட சில மில்கள் தடுமாறத் தொடங் கின. தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த மற்ற மில்களின் தொழிலாளர் களும் போராட்டத்தில் இறங்கினர்.
நஷ்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். அனைத்து மில்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அண்ணாதுரை முதல்வரானதும் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். ஆனால், அதை முழுதாக நிறைவேற்றுவதற்குள், அவர் மறையவே, வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டது.
பிறகு, முதல்வரான கருணாநிதியிடம் கோரிக்கை சென்றது. 1969ம் ஆண்டு, தமிழ்நாடு டெக்ஸ் என்றி அமைப்லப க்ஷேன் டைல்ஸ் கார்ப்பரேஷன் மாநிலம் முழுக்க 15 மில்களை அரசே ஏற்று நடத்தியது. 1970களின் தொடக்கத்தில் இந்தியா முழுக்க இதே பிரச்னை நிலவியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தமிழகத்தின் 15 மில்கள் உட்பட, இந்தியா முழுக்க 123 மில்களை தேசிய ஜவுளிக் கழகம் (என்.டி.சி.,) கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அந்த வகை யில், என்.டி.சி., மில்க ளுக்கு விதை போட்டது தமிழகம்தான்.
இந்த மில்கள் காலப் போக்கில் ஒவ்வொன்றாக நலிவடைந்தன. தமிழகத்தில் 10 என்.டி.சி., மில்கள் இயங்கின. அவற்றில் கோவையில் சோமசுந்தரா. மட்டும் காளீஸ்வரா ஏ, கம்போடியா, முருகன் மில், பங்கஜா மில், ஸ்ரீ ரங்கவிலாஸ், கோவை ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், சாரதா மில்ஸ் என 8 இயங்கின.
காளீஸ்வரா பி. பயோனீர் இவை, முறையே சிவகங்கை, ராம நாதபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன. கோவையில், சோமசுந்தரா, சாரதா, காளீஸ்வரா மில்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்படுவதில்லை. கிருஷ்ணவேணி மில், தனி யாருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. சத்தி சாலையில் அமைந்திருந்த ஓம் பராசக்தி மில், கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
கம்போடியா, முருகன், பங்கஜா, ரங்கவிலாஸ். சி.எஸ்.டபிள்யூ., என 3 மில்கள் செயல்பட்டு வந்தன. இங்கு, 3,500க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 2020ல் கொரோனாவைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்ட இந்த ஆலைகள். மீண்டும் செயல்படவே இல்லை.
மத்திய அரசு நினைத்தால் இந்த மில்களை மீண்டும் செயல்படுத்த முடியும் என்கின்றனர் தொழிலாளர்கள். இது தொடர்பாக, ஹெச்.எம்.எஸ்., மாநில தலைவர் ராஜாமணி கூறியதாவது: 2020 மார்ச் 24ம் தேதி, கொரோனா பெருந்தொற்றால் மில்கள் மூடப்பட்டன. அதன் பின், என். டி.சி., மில்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை. 2020 மே 17ம் தேதி வரை தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது.
பின்னர் பாதி சம்பளம் திறக்கும் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, தொழிலாளர்கள் போராடி யதால், தவணை தவணை யாக சம்பளம் வழங்கப்பட் டது. முதலில் 2023 ஜூன் வரையும், பின்னர் 2024 அக்., வரை முழுசம்பளம் வழங்கப்பட்டது. அக்., பிறகு சம்பளம் வழங்கப்படவில்லை.
ரூ.50 ஆயிரம் கோடி சொத்து
என்.டி.சி., மில்களுக்கு நாடு முழுதும் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதி கமான சொத்துகள் உள்ளன. கடந்த 8.9.1995 என்.டி.சி., சட்டத்திருத் தம் ப ஏபிரிவின்படி, என். டி.சி., மில்களின் சொத்து களை விற்றால், அது என். டி.சி., வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பயன்பாட்டுக்கு அந்த நிதியைத் திருப்பி விட முடியாது. இந்த அடிப்படையில், சில சொத்துகளை விற்பனை செய்தால், கோவையில் மில்களை நவீனப்படுத்தி செயல்படுத்த ரூபாய் என்பது என்.டி.சி., யைப் பொறுத்தவரை, ஒரு பொருட்டே அல்ல.
ரூ.4,000 கோடி நிலம்
கோவையில் உள்ள என்.டி.சி., மில்களுக்கு 141 ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு 3.4,000 கோடிக்கு மேல், நகரின் பிரதான பகுதியில், குறைந்தது 7 முதல் 32 ஏக்கர் வரை
ஒவ்வொரு மில்லுக்கும் இடம் உள்ளது. சில இடங்களை விற் பனை செய்து, அதனை, மற்ற மில்களை நவீனப்படுத்த பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த மில்கள் 32 சதவீதம் வரை போனஸ் தந்தவை.
என்.டி.சி., மில்களின் காலியிடங்களில் குடியிருப்புகளைக் கட்டி, மில் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விடலாம். வணிக வளாகங்கள் கட்டி, அவற்றை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம். அதில், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

