ADDED : டிச 24, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பேருந்துகளில், 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்' என, எழுதப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க., அரசு, தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்துள்ளது. அதை எழுதுவதில், தி.மு.க., அரசுக்கு என்ன தயக்கம். 'தமிழ்நாடு' என எழுதினால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு விடுமா? நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்பும், அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்ற பெயரை சேர்க்க மறுத்து, தி.மு.க., அரசு அமைதி காப்பது ஏன்?
கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அனைத்தும், தங்கள் மாநிலப் பெயரை பெருமையோடு பஸ்களில் எழுதியிருக்க, தி.மு.க., அரசு மட்டும் மாநில பெயரை அவமானமாக கருதுகிறது. பழையபடி தமிழக அரசு பேருந்துகள் அனைத்திலும், 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்' என, முழுமையாக எழுத வேண்டும். இல்லையென்றால், நாம் தமிழர் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.
-- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

