அமைச்சர் மகேஷ் அணியும் ¹ 'டி - ஷர்ட் 14417' மெசேஜ் என்ன?
அமைச்சர் மகேஷ் அணியும் ¹ 'டி - ஷர்ட் 14417' மெசேஜ் என்ன?
ADDED : அக் 10, 2024 01:18 AM

சென்னை:பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், '14417' எண்ணுள்ள 'டி - ஷர்ட்' அணிந்து வலம் வருகிறார்.
இதுகுறித்து, துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 2018ல், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், மன அழுத்தத்தை போக்கவும், '14417' என்ற இலவச தொலைபேசி எண்ணை, பள்ளிக் கல்வி துறை அறிமுகம் செய்தது. பின், அது துறையின் தகவல் உதவி மையமாக மாற்றப்பட்டது.
இந்த எண்ணை, பள்ளிக் கல்வி துறை சார்ந்த திட்டங்கள், உயர் கல்வி குறித்த சந்தேகங்கள், உயர் படிப்புகள், மனநல ஆலோசனைகள் உள்ளிட்டவற்றுக்கு, மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் கூட, இந்த எண்ணின் வழியாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், '14417' எண்ணுள்ள டி - ஷர்ட்டை, அமைச்சர் அணிந்து செல்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

